ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம்


நம் எல்லாவர்க்கும் ஒரு உலகம்.
ஒவ்வொரு உலகம்.
அதில் கொஞ்சம் மக்கள்
கொஞ்சமேனும் சண்டைகள்.
அதை அலட்சியப்படுத்தும்
பிறரது உலகங்கள்.
அதை சட்டை செய்யாத
நம் உலகத்தின் பிதற்றல்கள்…
எல்லாம் என்றோ ஒரு நாள்
ஓருலகம் ஆகும் என்ற நம்பிக்கையில்
அவரவர் உலகங்களில்
ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அறிவானவர் போலவே தோன்றுகிறார்
சிலசமயம் அறிவே அற்றவர் போலவும்.

Advertisements

அசிங்கப்படாமல் அசிங்கப்படுங்கள்!


நாம் ஒன்றைத் தவறாகக் கூறிவிட்டால், மனம் வலிக்கிறது. அதுவும் மற்றவர் முன்னென்றால், அதிகமாகவே கவனம் செலுத்துகிறோம்.

நமக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறோம். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அப்படியிருக்க, நாம் ஒரு செய்தியைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ இரு காரணங்கள் இருக்கிறது.

Continue reading

The ‘Don’t know!’ Purpose


“There is a poetic justice in the fact that a quarter of the world, and two of its seven continents, are named after a little-known Italian whose sole claim to fame is that he had the courage to say ‘We don’t know’. The discovery of America was the foundational event for the Scientific Revolution”
– Dr. Yuval Noah Harari

“You don’t know” is not an unfamiliar phrase. We used to hear that from our childhood, whenever we try to ask or say something out of our own observations about the surroundings, practices and lifestyle. “You don’t know about it. Don’t talk like that.” is what I have always got starting from my mother. And None of them seem so scientific. But here is an historian who says that the courage to say ‘We don’t know’ has led to a better Scientific Revolution.

Are there two different, ‘I don’t know’?

Continue reading

மாயையோ?


நாட்டுப்பற்று நிரம்பி வழிந்துகொண்டிருந்தது
போர்வீரர்களுக்காக ஒரு நாள்.
உணர்ச்சிகள் பொங்கத்தான் செய்தது.
அடக்கமுடியாமல் ஒருவர்,
“எனக்கொரு பிள்ளை பிறந்தால்
எல்லைக்குத்தான் அனுப்புவேன்!”
கரவொலிகள் காற்றெங்கும் பரவின.
கழுத்துவரை வந்தடைத்தது,
ஏனோ என்னால் மட்டும்
அந்த குழந்தையின் கனவு
பறிக்கப்படுவதைப்பற்றியே கவலைக்கொள்ள முடிந்தது.
தேசத்துரோகிதான் இப்படி யோசித்திருப்பானோ?

நம் கனவில் பெற்றோர்கள்
தன் கருத்தைத் திணித்தல்
தவறென்றுணர்ந்த புதிய தலைமுறையன்றோ?

பின் எல்லா அறிவும்
தெளிவும் பின் தள்ளப்பட்டு
தேவையென்றாக்கப்பட்டு மேலெழும் போதையோ?
மாயையோ? நாட்டுப்பற்று?