மீண்டும் ஒரு தேட‌ல் !


மீண்டும் ஒரு தேட‌ல். மீண்டு வ‌ந்த‌ இட‌த்தை நோக்கியே! ஜ‌ன‌வ‌ரி 12, இர‌வு சிறிதுநேர‌ம் சிறுவ‌னாகி பார்க்க‌லாம் என‌ ம‌ன‌ம் சொன்ன‌து. இந்த‌ சென்னையும் விளையாட்டைத் துவ‌ங்கியது. பேருந்தில் அம‌ர்ந்துகொண்டு பார்த்த‌ இட‌ங்க‌ளிலெல்லாம், ஏமாற்ற‌ மிர‌ட்டும் க‌ண்க‌ள் ப‌ய‌முறுத்திய‌து.

ப‌ய‌த்தை ம‌றைத்துக்கொள்ள‌, ஆன‌ந்த‌விக‌ட‌னுக்குள் க‌ண்க‌ள் ம‌றைந்த‌ன‌. ஆவலாக‌, ந‌ண்ப‌ரின் அருந்த‌தி ராய் பேட்டியைப் படித்துவிட்டு, ச‌ற்றே இட‌ப்ப‌க்க‌ம் பார்த்தேன். “சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ஸ்டைலில்” பார்த்துக்கொண்டிருக்கும் இரு க‌ண்க‌ள்; ப‌ரிட்ச‌ய‌மான‌ க‌ண்க‌ள்தான்! ஆனாலும், ச‌ந்தேக‌மும், ஆச்ச‌ரிய‌முமாக‌, ப‌க்க‌ங்க‌ளுக்குள் மூழ்கினேன், என் உள்ள‌ங்கைக‌ளில் உண‌ர்ச்சிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌வ‌னாக‌!

‘தானே’ துய‌ர் துடைப்போம்! ந‌ண்ப‌ன் சொல்லுகையில் கேலிசெய்த‌ என்மீது என‌க்கே கோப‌ம்கொள்ள‌ செய்த‌து, அந்த‌ க‌ட‌லூர் க‌ண்ணீர் காவிய‌ம். எப்பொழுதும்போல் ஏதாவ‌து செய்வோம் என‌ விழிமூடி, விழிதிற‌க்கும்பொழுது, வ‌ந்த‌து, த‌க‌டூர். என் ஊர்.

இனி சிறு பிள்ளையாக‌ இருந்தாலும், ஏமாற்ற‌ப்ப‌டும் ப‌ய‌ம் என‌க்கில்லை. அந்த‌ இருக்க‌ண்க‌ளுக்கு அதே ஸ்டைலில் விடைசொல்லிவிட்டு, வ‌ழிந‌ட‌ந்தேன். ஊர் மாறியிருந்தது. ஊர்மேல், இருந்த‌ என் பார்வை மாறியிருந்த‌து. காலை எழுந்த‌வுட‌ன், அம்மாவின் திட்டுக‌ள், அம்மாவை திட்டுத‌ல் என‌ வ‌ழ‌க்கமாக‌, செல்லும்பொழுது, அப்பாவைப் பார்க்க‌ச் செல்ல‌ முடிவெடுத்தேன். “எல்லாரும் கெட்ட‌வ‌ங்க‌ன்னு நினைச்சாதான் பிழைக்க‌முடியும்” என‌ செல்லும் வ‌ழியில், அம்மாவின் அறிவுரைக‌ள் (அறுப்பு) காதை எட்ட‌ முய‌ற்ச்சிக்க‌, அதை ஒத்திவைத்துவிட்டு எட்டிப்பார்த்தேன்.

“அப்பா!”

எதுவும் பேசாம‌ல், எல்லாம் தெரிந்துவிட்ட‌து, இருவ‌ருக்கும். கிழிந்த‌ லுங்கி; வாழைக்க‌ரை ப‌டிந்து ப‌ல‌வார‌ம் துவைக்காத‌ ச‌ட்டை; க‌ண்க‌ளில் என்னைக் க‌வ‌ரும் க‌ம்பீர‌ம். “ம‌ச்சி உன் டிர‌ஸிங் ஸென்ஸ் சூப்ப‌ர்டா” என‌ ஹாஸ்ட‌லில் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் சொன்ன‌து நெஞ்ச‌டைத்த‌து. ஓட்டோ, பாடா,ஜீரோ, என‌ சுற்றித்திரியும் என‌க்கு ஒற்றை க‌ர்ச்சீப் என்றாலும், வாங்கித்த‌ருவ‌து இவ‌ர்தான். பார்த்த‌ ம‌கிழ்ச்சியை, அவ‌ர் ஆடைக‌ள் ம‌றைத்த‌ன‌; என் பார்வையை க‌ண்ணீர் ம‌றைத்த‌து. எப்ப‌வும்போல‌, த‌ண்ணீர் குடித்து க‌ண்ணீரை ம‌றைத்தேன்! (ர‌த்த‌ம் வ‌ந்தா த‌ண்ணி குடிக்க‌ணும்) இம்முறை ர‌த்த‌ம் வ‌ந்த‌து க‌ண்க‌ளில்!

“ப‌ண்டிகை முடிந்த‌தும் வீட்டுக்கு போ!” என்றார் அப்பா. அம்மாவின் ப‌ல‌ திட்டுக‌ளிலும், ம‌றுத்த‌ நான் விடைபெறும்பொழுது அமைதியாக‌, பொங்க‌ல் முடிந்து போவ‌தாக‌ சொன்னேன். (எக்ஸாம் ஆயிர‌ம் இருக்கு, ஆனா அப்பா ஒருத்த‌ர் தான்!) தெருவைத் தாண்டும்வ‌ரை பார்வை, திரும்பியிருந்த‌ அந்த‌ த‌லையை நோக்கி!

“அப்பா, பொங்க‌லுக்கு வெள்ளை வேட்டி, ச‌ட்டை எடுத்துறுக்க‌னே!” என்று பெருமைப்ப‌ட்டுக்கொள்ள‌ எண்ணிவ‌ந்த‌ நான், இவ‌ருக்கு வேட்டி ச‌ட்டை வாங்கிக்கொடுத்துட்டு, பெருமைப்ப‌ட்டுக்க‌லாமென‌ திரும்பினேன்!

நாட்க‌ளை, ந‌க‌ர்த்த‌ சினிமாக்க‌ள் ஒரு சிற‌ந்த‌ தீர்வு. இருக்கும் பட‌ங்க‌ளையெல்லாம் பார்த்துவிட்டு, என் ஊரைச்சுற்றி ஒரு ஊர்வ‌ல‌ம். பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு பானிப்பூரி; நினைக்கும் நேர‌த்தைவிட‌ வேக‌மாக‌ செல்லும் சைக்கிள்; வ‌ள‌ர்ச்சியின் வ‌ழித‌ட‌த்தில் கால‌டி எடுத்துவைத்திருக்கும் த‌ட‌ங்க‌ள் என‌ ஊரை இருந்து, ம‌றைந்து ர‌சித்தேன்.

பொங்க‌ல்! வேட்டி க‌ட்ட‌ நான் ப‌ட்ட‌பாடிற்கு ஒரு பாட்டெழுதிவிட‌லாம். புற‌ப்ப‌ட்டேன், WON Group ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஒரு ச‌ந்திப்பு. ஊர் உண்மையாக‌வே வேறுமாதிரியாக‌ பார்ப்ப‌தாக‌ உண‌ர்ந்தேன்! எல்லாம் ப‌ழ‌கிப்போன‌தாக‌ என‌க்கு ப‌ட்ட‌து. ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் எப்பவும்போல‌ தீவிர‌மான‌ விவாத‌ம் (ப‌க்க‌த்துவீட்டு ஆண்ட்டி திட்டுற‌ அள‌வுக்கு!), எப்ப‌வும்போல‌ செய‌லாக‌ மாறாதோ என்ற‌ முடிவுட‌ன். ஆனால், ஏதோவொரு தீர்மான‌த்துட‌ன்.

த‌ர்ம‌புரியை முழுதாக‌ சுவாசிக்க‌ முடியாத‌போதிலும், எந்த‌ தேவைய‌ற்ற‌ புகையையும் சுவாசித்துவிட‌வில்லை என்ற‌ திருப்தியுட‌ன், திரும்பும்பொழுது, மீண்டும் ஒரு ப‌ழைய‌ ஓசை, சிறுபிள்ளை போன்ற‌ குர‌ல், ப‌ல‌ நாள் க‌ழித்து கேட்ப‌தாக‌ தோன்றியது, “அண்ணா, Byyeeee”

திருப்பிசொல்ல‌ கைய‌சைவோ, ப‌திலோ, போதாதவ‌னாய், தெரியாத‌வனாய், த‌ர்ம‌புரியைவிட்டு,

தேட‌ல் தொட‌ரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s