ஒரு கைப்பிடிப்பின் இறுக்கத்தில்…


‘கரணுக்கு நோட்டு 25 ரூபாய்…
அவனுக்கு நாலு இட்லி 12 ரூபாய்…
ஆட்டோக்கு 8 ரூபாய்…
ஊருக்கு வேற 100 ரூபாய் அனுப்பனும்…
மொத்தம்…’

ஒரு கையில் எதையோ தன் முந்தானையுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு, மற்றொரு கைவிரலில் விளையாடி வந்தாள்.

‘145 ரூபாய்’

அன்றைய தினக்கூலி அவளுக்கு 150 ரூபாய்தான் என்றாலும், ஏதோ கணிதமேதையை போல் ஒரு மகிழ்வை உணர்ந்தாள்.

‘மீதி 5 ரூபா… ஒரு பன் வாங்கலாம்…’

சற்றே தெளிந்து, தன் வழிநோக்கி நகர்ந்தாள்.

‘திருப்போர்! திருப்போர்!’ (அட திருப்போரூர்தாங்க!)

வரலாற்றாளர்கள்கூட வியந்துபார்க்கும், ஊர்களின் உச்சரிப்புகளெல்லாம், இந்த ஆட்டோக்காரர்களுக்குத்தான் சாத்தியம்.

‘பையா! காலவாக்கம்’

ஒரு கையில் நோட்டும், முகத்தில் அமைதியுமாக, ஓரமாக சென்று அமர்ந்தாள். மனதில் தொலைந்த இறுக்கம், ஏனோ இன்னும் மற்றொரு கையில் அகலாமல்…

‘அண்ணா, எஸ் எஸ் என்!’

இதுவரை, இயல்பாக சென்ற தன்வாழ்வில், நாங்கள் இருவரும் ஏற்படுத்தப்போகும் துன்பத்தை அவள் அறிந்திருக்கவில்லை.
இன் ஃபாக்ட், நாங்களும்தான் !!

கழுதைமேல் ஏற்றிய பொதியென, கண்ணில்பட்ட மனிதக்கூட்டமெல்லாம் அடைக்கப்பட்டு விருந்தாடியம்மன் துணையுடன், அந்த ஆட்டோ ஆர ஆமர கிளம்பியது. பற்றாததற்கு இதற்கு ஒரு பத்து வயதான நடத்துநர் வேறு.
ரொம்ப கண்டிப்பான்வர்…

எல்லாம் வேகமாக செல்லும் இந்த நாகரிகப்போக்கில், இறங்கியபிறகு பணம்கொடுத்து தங்கள் பொற்காலத்தை வீணடிக்க நாங்களோ, ஓட்டுநரோ தயாராக இல்லாத்தால், வசூல் தொடங்கியது…

‘ஹரே பையா! பைசா.. பைசா. எங்கே?’

‘செங்கண்மால்’

‘பைவ் ருபீஸ்’

‘அண்ணா, காசு குடுங்க…’

தலைவர் படத்துக்கு முதல் நாள் டிக்கெட்வாங்கும் ஆவலைப்போல, தான் கேட்டு வாங்கி எண்ணிவைத்த சில்லரையை நீட்டினாள்.

‘பையா! ஏக் காலவாக்கம்’

‘தம்பி, டூ எஸ் எஸ் என்’

என் பர்ஸில் அடுக்கிவைக்கப்பட்ட பத்து ரூபாய்களில் இரண்டை நீட்டினேன். மிகவும் அறிவாளி அவன், எங்களிடம் சில்லரை கிடையாது என்பதும் அவன் அறிவான். அவளுக்கு சில்லரையே பெரிது என்பதும் அவன் அறிவான். அவள்பக்கம் திரும்பி,

‘எஸ் எஸ் என்ல இருந்து டென் ருபீஸ்தான். தஸ்…தஸ் ரூபா!’ என்றவன் என்னிடம் இருபது ரூபாயை பெற்றுவிட்டான்.

அவளிடம் மௌனம். கைகளிலும் மனதிலும் அப்படி ஒரு இறுக்கம். ஒரு கணம் அவளுக்கு எல்லா முன்னேற்பாடுகளும், கனவுகளும் வீணாய்போனது புரிந்தது. கைபேசியின் கண்கூசும் ஒளியில் கலங்கிப்போன எங்களால், அவள் கண்கலங்கி பார்த்த ஒளி அவசியமற்றதாகப்பட்டது.

‘இன்றிரவு மட்டும்தானே, பட்ட்டினி பரவாயில்லை!’ என்று சொல்லிக்கொண்டாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக, தன் கையின் இறுக்கம் விலகி, இரண்டு ரூபாயை இழக்க, தன் கழுத்தை யாரோ இறுக்குவதாக உணர்ந்தாள்…

அது ஒரு மௌனமான கொலை…
யாரும் பார்க்காமல்… எஸ் எஸ் என் வந்தது…

‘மச்சி, அடுத்த சண்டேவும் முனியாண்டி விலாஸ் போலாம்டா’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s