பனுவல் பயணங்கள் – ஒரு தொடக்கம்


About Panuval Book Store
Facebook: Panuval Thiruvanmiyur
Website:  Panuval.com 

மிகச் சிலராலேயே ஒருசில
நிமிடங்களில், அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று வெளிபடுத்துவது மட்டுமில்லாமல், காண்பவருக்கும் அதைப் பிடிக்கச்
செய்துவிட முடிகிறது. என் வாழ்வில் அவர்களைப் போன்றவர்கள் அரிதிலும் அரிது. முதன்முதலில் அப்படி ஒருவரை எங்கள் ஊரில் மசால்பூரி கடையொன்றில் கண்டேன். இன்றும், என் கடைசிகாலத்தில் மரம் வைத்து வாழ்வதைவிட மசால்பூரி கொடுத்து வாழலாம் என்றொரு கனவுண்டு.

அந்த வரிசையில் சமீபத்தில் சந்தித்த ஒரு ஓய்வுபெற்ற தொல்லியல்துறை பேராசிரியரும் சேர்ந்துள்ளார். Continue reading

இணையில்லா இந்த நொடிகள்


இணையில்லா இந்த நொடிகள்
இறுக்கிப் பிடித்திருக்கும் இடிகள்
இன்னும் எத்தனையோ?
அது அவிழ்ந்து விழும் நேரம்
யார் கற்பனையோ?

வாழ்க்கையின் அதிசயத் தருணங்களில் மிக சொற்பமானவையே நம் திட்டங்களில் இருக்கிறது. நம் திட்டங்களில் இருந்து மீறி நடப்பவையே நம்மை அதிசயித்து நிற்கச் செய்கிறது. மூன்று நாட்கள் ரசித்து, களித்து, வியந்து, சேகரித்த அனுபவங்களின்  மூட்டையெல்லாம், மூன்று நொடிகளில்கூட முக்கியமில்லாமல் போய் மூலையில் முடங்கிக்கொள்கிறது.

கடைசியாக சென்னையைவிட்டு வீடு திரும்பும்போது… Continue reading

Journey to Puvidham


Reaching Puvidham

Website: http://www.puvidham.in
Place: Nagerkoodal, Nallampalli Union, Dharmapuri
From Nallampalli, You can  take bus 10A to the school
but the frequency will be less. Auto will charge Rs. 200

A visit to Puvidham, a model school based in my native town Dharmapuri was a long-standing plan, achieved recently last week along with a friend Priyanka. Puvidham Learning Centre was started in 2000 by two architects, Meenatchi and Umesh in Nagerkoodal village in Dharmapuri. They follow Montessori Method of Teaching. Instead of detailing and listing out each and everything they have focused on, A story of our guide through Puvidham, a first standard student Kanishka will sum up everything. Continue reading

எனக்குள் ஒரு தேடல்


என் வாழ்வில் நான் என்னவாக விழைகிறேன் என்ற எண்ணம் எழ ஆரம்பித்த்பொழுது, நான் இதுவரை என்னவாகி இருக்கிறேன் என்ற கேள்வி முளைத்தது. ஒரு பொறியாளனாக இவ்வுலகில் எல்லாவற்றையும் ஒரு equation மூலமாகவும், ஒரு graphஆகவும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையும், அதற்கென ஒரு ‍Critical point-உம் இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

‘என் வாழ்வில் அந்த தருணம் என்று நிகழும்?’ என்ற எதிர்பார்ப்பே எல்லோர் மனதிலும் ஒருவித ஏமாற்றத்தோடே வாழ்க்கையைக் கடக்க வைக்கும். நான் அப்படி ஒரு தருணம் நிகழ்ந்தேவிட்டது என்று முடிவெடுத்தேன். அந்தத் தருணத்திற்கானத் தேடல் பல தெரிவுகளை என்முன் வைத்தது. சொல்லிக்கொள்ளும்படியான பல தருணங்கள் கம்பீரமாகவே எட்டிப்பார்க்க,

Continue reading

மீண்டும் ஒரு தேட‌ல் !


மீண்டும் ஒரு தேட‌ல். மீண்டு வ‌ந்த‌ இட‌த்தை நோக்கியே! ஜ‌ன‌வ‌ரி 12, இர‌வு சிறிதுநேர‌ம் சிறுவ‌னாகி பார்க்க‌லாம் என‌ ம‌ன‌ம் சொன்ன‌து. இந்த‌ சென்னையும் விளையாட்டைத் துவ‌ங்கியது. பேருந்தில் அம‌ர்ந்துகொண்டு பார்த்த‌ இட‌ங்க‌ளிலெல்லாம், ஏமாற்ற‌ மிர‌ட்டும் க‌ண்க‌ள் ப‌ய‌முறுத்திய‌து.

ப‌ய‌த்தை ம‌றைத்துக்கொள்ள‌, ஆன‌ந்த‌விக‌ட‌னுக்குள் க‌ண்க‌ள் ம‌றைந்த‌ன‌. ஆவலாக‌, ந‌ண்ப‌ரின் அருந்த‌தி ராய் பேட்டியைப் படித்துவிட்டு, ச‌ற்றே இட‌ப்ப‌க்க‌ம் பார்த்தேன். “சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ஸ்டைலில்” பார்த்துக்கொண்டிருக்கும் இரு க‌ண்க‌ள்; ப‌ரிட்ச‌ய‌மான‌ க‌ண்க‌ள்தான்! ஆனாலும், ச‌ந்தேக‌மும், ஆச்ச‌ரிய‌முமாக‌, ப‌க்க‌ங்க‌ளுக்குள் மூழ்கினேன், என் உள்ள‌ங்கைக‌ளில் உண‌ர்ச்சிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌வ‌னாக‌! Continue reading