பனுவல் பயணங்கள் – ஒரு தொடக்கம்


About Panuval Book Store
Facebook: Panuval Thiruvanmiyur
Website:  Panuval.com 

மிகச் சிலராலேயே ஒருசில
நிமிடங்களில், அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று வெளிபடுத்துவது மட்டுமில்லாமல், காண்பவருக்கும் அதைப் பிடிக்கச்
செய்துவிட முடிகிறது. என் வாழ்வில் அவர்களைப் போன்றவர்கள் அரிதிலும் அரிது. முதன்முதலில் அப்படி ஒருவரை எங்கள் ஊரில் மசால்பூரி கடையொன்றில் கண்டேன். இன்றும், என் கடைசிகாலத்தில் மரம் வைத்து வாழ்வதைவிட மசால்பூரி கொடுத்து வாழலாம் என்றொரு கனவுண்டு.

அந்த வரிசையில் சமீபத்தில் சந்தித்த ஒரு ஓய்வுபெற்ற தொல்லியல்துறை பேராசிரியரும் சேர்ந்துள்ளார். Continue reading

இணையில்லா இந்த நொடிகள்


இணையில்லா இந்த நொடிகள்
இறுக்கிப் பிடித்திருக்கும் இடிகள்
இன்னும் எத்தனையோ?
அது அவிழ்ந்து விழும் நேரம்
யார் கற்பனையோ?

வாழ்க்கையின் அதிசயத் தருணங்களில் மிக சொற்பமானவையே நம் திட்டங்களில் இருக்கிறது. நம் திட்டங்களில் இருந்து மீறி நடப்பவையே நம்மை அதிசயித்து நிற்கச் செய்கிறது. மூன்று நாட்கள் ரசித்து, களித்து, வியந்து, சேகரித்த அனுபவங்களின்  மூட்டையெல்லாம், மூன்று நொடிகளில்கூட முக்கியமில்லாமல் போய் மூலையில் முடங்கிக்கொள்கிறது.

கடைசியாக சென்னையைவிட்டு வீடு திரும்பும்போது… Continue reading

கவிஞரின் கணவன்


கவிஞரின் கணவனாவது எவ்வளவு
கனவு போன்றது
கோப்த்தைக்கூட அவள்
கவிதையாக்குகிறாள் நான் அதில்
கரைந்து கண்ணீராகிறேன்…

டாய், பொண்டாட்டி கோவத்துல கண்ணுல தண்ணீ வர அளவு அடிச்சுருக்கா.
டகால்டி, என்னாமா சமாளிக்குறான் பார்த்தியா?

Journey to Puvidham


Reaching Puvidham

Website: http://www.puvidham.in
Place: Nagerkoodal, Nallampalli Union, Dharmapuri
From Nallampalli, You can  take bus 10A to the school
but the frequency will be less. Auto will charge Rs. 200

A visit to Puvidham, a model school based in my native town Dharmapuri was a long-standing plan, achieved recently last week along with a friend Priyanka. Puvidham Learning Centre was started in 2000 by two architects, Meenatchi and Umesh in Nagerkoodal village in Dharmapuri. They follow Montessori Method of Teaching. Instead of detailing and listing out each and everything they have focused on, A story of our guide through Puvidham, a first standard student Kanishka will sum up everything. Continue reading

For a better democracy…


With just one week ahead for the day, let me just stop this temporary “Captain for CM” kind of posts and get some things really straight for us to look at and ponder. It is easier to find that we are still not out of monarchical psyche, which I can also show so many evidences in our day-to-day life itself. That said I am also not denying that it is difficult to get out of it completely and all, within just less than 100 years. It takes time. But it also takes efforts.

A sudden question arises, when we boast about being the huge democracy in the world, I doubtfully ask myself, “What is the impression or a judgment that comes to my mind when I see an MLA, despite the party, caste, religion, gender, all that? What’s she or he actually looking like to me?”

A person who represents you? Really? Continue reading

பழைய தத்துவம்


ஒரு பரந்த குளத்தின்
மேல் இழையாய் நான்…
எனைப் பறந்து வந்து
மேல்தொட்ட மலரா அவள்?
தொடுவிசையால் குளிர்ந்தே
பனிமுழுதாய் உறைந்தேன்.
அவள்வசமென நினைத்தே
கண்களிறுக அயர்ந்தேன்.
ஒரு நெடிய அயர்ச்சியே,
இன்னும்…
புதிதாக சில்லென ஓர் குளிர்ச்சி
அவளேதான் என்று
பற்றிக்கொள்ள மேலெழுந்து
பனிக்கட்டிகளாய் சிதறி விழுந்து
வெட்டவெளியில் சுற்றிப் பார்த்தேன்.
எங்கும் பனிக்காலம்
முடியத் தொடங்குகிறது
புது வசந்தம் நோக்கி…

எனக்குள் ஒரு தேடல்


என் வாழ்வில் நான் என்னவாக விழைகிறேன் என்ற எண்ணம் எழ ஆரம்பித்த்பொழுது, நான் இதுவரை என்னவாகி இருக்கிறேன் என்ற கேள்வி முளைத்தது. ஒரு பொறியாளனாக இவ்வுலகில் எல்லாவற்றையும் ஒரு equation மூலமாகவும், ஒரு graphஆகவும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையும், அதற்கென ஒரு ‍Critical point-உம் இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

‘என் வாழ்வில் அந்த தருணம் என்று நிகழும்?’ என்ற எதிர்பார்ப்பே எல்லோர் மனதிலும் ஒருவித ஏமாற்றத்தோடே வாழ்க்கையைக் கடக்க வைக்கும். நான் அப்படி ஒரு தருணம் நிகழ்ந்தேவிட்டது என்று முடிவெடுத்தேன். அந்தத் தருணத்திற்கானத் தேடல் பல தெரிவுகளை என்முன் வைத்தது. சொல்லிக்கொள்ளும்படியான பல தருணங்கள் கம்பீரமாகவே எட்டிப்பார்க்க,

Continue reading