புதுச்சாயம்


ஓட்டைக்கூரை
ஒட்டடைச்சுவர்
ஒன்றாக் கதவு
ஒருவரும் உள்ளே வாரா
வழியே…

ஓலை வேறு
ஓரசன்னலும் வேறு
ஓவியங்கள் மின்ன
புதுச்சாயம் பட்டு
அழைக்கிறதென்ன?

ஓட்டைகள் ஒட்டப்படும் முன்
ஓவியங்கள் எதற்கு?
ஒருவரும் பார்க்காமல்
ஊருக்கெல்லாம் புதுச்சாயம்…

Advertisements

நானும் சிந்தனையாளனும்…


நான், சிந்தனையாளர்கள் என்று சொல்லிச்செல்லும், ‘Elitists’ என்ற கூட்டத்துடன் சேர்ந்துவிடவே விழைகிறேன் என்பதறிந்தேன்.

இன்று சிந்தனையாளர்களெல்லாம் மேடைப்பேச்சுகளிலும், தொலைக்காட்சிகளிலும், வலைதளப்பதிவுகளிலுமே அடையாளம் காணப்படுகிறார்கள். செயலில், செயலாக்கமாக மாறிய ஒரு சிந்தனையில், இன்றைய சிந்தனையாளர்களின் பங்கெடுப்பைப் பார்ப்பதரிது.

களப்பணியாளரிடம் இவர்கள் சிந்தனை சென்று சேர்வதில்லை; சேர்க்கப்படுவதில்லை. ஒரு சிந்தனையாளன், தன் சிந்தனையை ஒரு மேல்மட்டத்தில் வைத்துக்கொண்டு, தன் முழு நோக்கையும் ஒரு சிறந்த சமூக அமைப்பை உருவாக்குதலில் செலுத்தி, “இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும்” என்பதிலேயே செலவிடுகிறான்.

இதில், களத்திலிருந்து இப்படி இருக்கிறதே என்று கவலைக்கொள்ளும் ஒரு களப்பணியாளன் கவனம்கொள்வதில்லை. அவன், முன்னேற்பாடுகளை எடுத்துசெல்கிறான். சிந்தனையாளனும், அவன் செய்வதில் இப்படி இருக்கக்கூடாது என்பதிலேயே முனைப்பாக இருக்கிறான்.

இப்படி ஒரு கூட்டத்துடந்தான் நான் ஒருவனாக இருக்க விழைகிறேன்.
இதில் பெருமையேதும் இருக்கவில்லை.

சிந்தனையாளனுக்கும், செயல்வீரனுக்கும் இடைவேளை இருக்கவேண்டும்.
இல்லை, சிந்தனையாளர்கள், தங்கள் அரியணையிலிருந்து இறங்கிவந்து களப்பணிகளில் ஈடுபடுதல் வேண்டும்.

நானும் உட்பட… :-p